-->
 

              

தொன் போஸ்கோ கல்லூரி, ஏலகிரி மலையில் 'நடுவர்கோன் வேதநாயகம் தமிழ் மன்றம்' சார்பாக டிசம்பர் 11ஆம் தேதி காலை 11.20 மணிக்கு வெள்ளி விழா அரங்கிற்கு வெளியில் விழா நடைபெற்றது.

விழா நிகழ்ச்சிகள்

  • கல்லூரி முதல்வர் முனைவர் எல். இரவி அவர்கள், வளாகத் தந்தை, புல முதன்மையர் தந்தை அவர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் பாரதியார் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினர்.

  • பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெருமளவில் கலந்துக் கொண்டனர்.

  • மாணவர்களால் பாரதியார் பற்றிய உரைகள் நிகழ்த்தப்பட்டன.

பாரதியாரின் பங்களிப்புகள்

  • இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பாடல்கள் மூலம் விடுதலைத் தீயை மூட்டிய தேசியக் கவிஞர், தேசபக்திக் கவிஞர்.

  • மகாத்மா காந்தி போன்ற தலைவர்களால் பாடல்களின் எளிமை, வீரியம் பாராட்டப்பட்டது.

  • பெண் விடுதலை, சாதி ஒழிப்பு போன்ற சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் துணிச்சலுடன் பேசிய புரட்சிகரச் சிந்தனையாளர்.

இலக்கியத் தலைமை

  • புதுக்கவிதைக்கான முன்னோடி; எளிய நடையில் புதுமையுடன் கவிதைகள் படைத்து தமிழுக்கு புதிய யுகம் திறந்து வைத்தார்.

  • தேசிய ஒருமைப்பாடு, வேதாந்தம், சக்தி வழிபாட்டில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்.

  • சமூக சீர்திருத்தவாதி, தேசியவாதி, நவீன தமிழ் இலக்கிய வழிகாட்டி.

முடிவுரை: 

                 அவரது கருத்துகள் இன்றும் அவசியமானவை என மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விழா அமைந்தது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த. லதா அவர்களின் வழிகாட்டுதலில், முனைவர் பொ. சரவணன் அவர்களும், துறைப் பேராசிரியர்களும் ஒருங்கிணைத்தனர்.