-->
 

பொங்கல் விழா அறிக்கை – 13.01.2026

ஏலகிரியில் கல்விச் சேவையாற்றி வரும்  தொன் போஸ்கோ கல்லூரியில் தமிழ்த்துறை நடத்திய பொங்கல் பெருவிழா  13.01.2026 அன்று பப்பா துவாயூன் விடுதி மைதானத்தில் சிறப்பானதாக நடைப்பெற்றது. இப்பெருவிழாவிற்கு தொன்போஸ்கோ கல்லூரியின் இல்லத்தந்தை அருட்திரு போஸ்கோ அகஸ்டின் அவர்கள் தலைமை தாங்கினார். கல்லூரியின் துணை இல்லத்தந்தை அருட்திரு சி. ததேயூஸ் அவர்கள் பொங்கல் விழா குறித்து ஆசியுரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் லூ. ரவி அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். விழாவின் சிறப்பு விருந்தினரான திருமதி இராஜஸ்ரீ கிரிவேலன், (ஊராட்சி மன்றத் தலைவர், ஏலகிரிமலை) அவர்கள் பொங்கலின் சிறப்பினையும், மக்களின் வாழ்வியல் மற்றும் ஒற்றுமைக் குறித்து மாணவர்களிடம் சிறப்புரை வழங்கி சிறப்பித்தார். மேலும், இவ்விழாவில் அருட்தந்தையர்கள், துணை முதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் முன்னிலை வகித்தனர். விழாவினைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ந.கார்த்திக் அவர்கள் தொகுத்து வழங்கினார். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் ப. ஸ்ரீராம், கா.அன்பரசன் ஆகியோர்  மாணவர்களை ஒருங்கிணைத்தனர். கல்லூரியின் ஒவ்வொருத் துறையினருக்கும் பொங்கல் வைத்தல், கோலப்போட்டி, கயிறு இழுத்தல், திருக்குறள் ஒப்பிவித்தல் மற்றும் உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் சிறப்பாக நடைப்பெற்றன. பல்துறை சார்ந்த மாணவர்கள் போட்டியில் கலந்துக்கொண்டு தத்தம் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்பெருவிழாவைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் த. லதா அவர்கள் ஒருங்கிணைத்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் பொ.சரவணன் அவர்கள் நன்றி தெரிவித்தார். அனைவரது ஒத்துழைப்போடு பொங்கல் பெருவிழா செம்மையாக நிறைவுற்றது.